செவ்வாய், 29 செப்டம்பர், 2026

புரட்சியாளர் பகத்சிங்

 

புரட்சியாளர் பகத்சிங் 

இந்நாள் - அந்நாள்

பஞ்சாப் மாநிலம் பங்கா என்ற கிராமத்தில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் நாளில் பிறந்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலர் கொண்ட குடும்பம் அது. தந்தையும், இரு மாமாக்களும் சிறையில் இருந்து வெளிவந்த நாளில் பிறந்தார்.

இவர் எந்த மதத்தையும் சாராமல், கடவுள் நம்பிக்கையை மறுத்து, பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளில் உறுதியாக இருந்தார். சிறையில் இருந்தபோது “நான் ஏன் நாத்திகன்” (Why I am an Atheist) என்ற கட்டுரையை எழுதினார். இதனை ப.ஜீவானந்தம் தமிழில் மொழி பெயர்க்க,  தந்தை பெரியார்  அவர்கள் “குடிஅரசு”  இதழில்  வெளியிட்டார்.

இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு (Hindustan Socialist Republican Association – HSRA) இந்தப் புரட்சிகர அமைப்பில் முக்கியத் தலைவராகச் செயல்பட்டார்.

“இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி ஓங்குக) என்ற முழக்கத்தை இவர் பிரபலப்படுத்தினார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த போது அவருக்கு 12 வயது. சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அங்கு சென்றவர், அப்பாவி மக்களின் ரத்தம் தோய்ந்த மண்ணை புட்டியில் போட்டு எடுத்து வந்தார்.

சைமன் குழு 1928 இல் இந்தியா வருவதை எதிர்த்து  லாலா லஜபதிராய் அமைதிப் பேரணி நடத்தினார். அதில் ஏவிவிடப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்து லஜபதிராய் மரணமடைந்தார். இதற்குப் பழிவாங்கத் துடித்த பகத்சிங் தன் குழுவினருடன் இணைந்து, இதற்கு முக்கியக் காரணமான காவல் அதிகாரியைச் சுட்டுக்கொன்றார்.

1929 இல் தன் நண்பர்களுடன் இணைந்து, ஆங்கிலேயரின் அடக்குமுறைச் சட்டங் களுக்கு எதிராக, “கேளாத செவிகள் கேட் கட்டும்” என்ற முழக்கத்துடன் டில்லியில் இருந்த மத்திய சட்டசபையில் (Central Assembly) குண்டு வீசினார். அப்போது ‘‘குண்டு எறிந்தது மக்களைக் கொல்ல அல்ல, மாறாகப் புரட்சியின் செய்தியைப் பரப்பவே’’ என்று முழக்கமிட்டு சரணடைந்தார். பிரிட்டிஷ் அரசு இவர் மீதும், இவரது நண்பர்கள் சுக்தேவ், ராஜகுரு மீதும் வழக்குத் தொடர்ந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

துப்பாக்கியும் புத்தகங்களும் இவரது நெருங்கிய நண்பர்கள்.  சிறையில் இருந்தபோது ஏராளமான நூல்களைப் படித்தார். ‘தி டோர் டு டெத்’, ‘அய்டியல் ஆப் சோஷலிசம்’ போன்ற நூல்களை எழுதினார். சிறையில் இந்தியக் கைதிகளுக்கும் அய்ரோப்பியக் கைதிகளுக் கும் சம உரிமை வழங்க வலியுறுத்தி 116 நாட்கள் உண்ணா நிலையில் இருந்தார்.

ஏராளமான இளைஞர் களுக்கு உத்வேகம் அளித்து விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்குபெறச் செய்த புரட்சியாளரான ‘மாவீரன்’ பகத்சிங் 24 ஆவது வயதில் 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் நாளில் ஆங்கில அரசால் தூக்கி லிடப்பட்டார்.

அதுபற்றி தந்தை பெரியார் எழுதிய தலையங்கத்தில் பகத்சிங்கின் தியாகத்தைப் போற்றி அவரை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம்!! பாராட்டுகின்றோம்!!! என்று எழுதினார்.

அடிப்படை குறிப்புகள் : -விடுதலை நாளேடு, 29.09.2026

கடைசியாக:திருத்தப்பட்ட நாள் ; 29.09.2026

ந.சிவராஜ்

 

சமூக நீதிக்கான போராளி ந.சிவராஜ்



இந்திய அரசியலிலும், சமூக நீதிக்கான இயக்கத்திலும் மறக்க முடியாத ஒரு தலைவர் ந. சிவராஜ் ஆவார். இவர், ‘இராவ் பகதூர்’ என்ற மரியாதைக்குரிய பட்டத்தைப் பெற்றிருந்தாலும், மக்களால் அன்புடன் ‘மேயர் சிவராஜ்’ எனப் போற்றப்பட்டார்.

ந. சிவராஜ் அவர்கள் செப்டம்பர் 29, 1892 அன்று பிறந்தார். சென்னை பிரசி டென்சி கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற அவர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞரானார். சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றிய அவர், சட்ட அறிவையும் ஆழமான சமூக அக்கறையையும் கொண்டிருந்தார்.

ஆரம்ப காலத்தில் நீதிக்கட்சியின்  உறுப்பினராக  இருந்த இவர், 1926 முதல் 1937 வரை சென்னை சட்டமன்றக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

1945 முதல் 1946 வரை சென்னை மாநகர மேயராகப் பொறுப்பு வகித்தார். இந்தப் பதவியின் மூலம் அவர் ஆற்றிய பணிகள் அவரைப் பரவலாக அறியச் செய்தது.

டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களுடன் இணைந்து அகில இந்திய தாழ்த்தப்பட்ட மக்கள் கூட்டமைப்பை (All-India Scheduled Castes Federation – AISCF) நிறுவினார். 1942-இல் நாக்பூரில் நடைபெற்ற இதன் தேசிய மாநாட்டிற்குத் தலைமை வகித்து அதன் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியக் குடியரசுக் கட்சி: அம்பேத்கர் நிறுவிய இந்தியக் குடியரசுக் கட்சியின் (Republican Party of India) முதல் தேசியத் தலைவராகவும் இவர் பணியாற்றினார்.

1957 ஆம் ஆண்டு செங்கல்பட்டு தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் ஜனநாயக அமைப்பிலும் பங்களிப்பு செய்தார்.

ந. சிவராஜ் அவர்கள், தந்தை பெரியார் மற்றும் இரட்டைமலை சீனிவாசன் போன்ற தலைவர்களுடன் இணைந்து சுயமரியாதை இயக்கம், பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம் மற்றும் பெண்கள் உரிமை இயக்கங்களில் தீவிரமாகச் செயல்பட்டவர். தனது மனைவி அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களுடன் இணைந்து தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தார்.

ந. சிவராஜ் அவர்களின் பிறந்தநாள், அவர் தீண்டாமைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூக சமத்துவத்திற்காகவும் ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூரும் ஒரு வாய்ப்பாகும்.

ந. சிவராஜ் அவர்கள் செப்டம்பர் 29, 1964 அன்று தனது 72 ஆவது பிறந்தநாளிலேயே மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:-

1.விடுதலை நாளேடு, 29.09.2026

கடைசியாக திருத்தப்பட்ட நாள்:  29.09.2026

தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு (13.11.1938)

  தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு (13.11.1938) ஈ.வெ.ரா. அவர்களுக்கு 'பெரியார்' என்று பட்டம் கொடுத்த தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு! தந்தை...