இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ராபர்ட் வில்லியம் டி.எஸ்கார்ட் ஆஷ் (Robert William d'Escourt Ashe) என்பவரை 1911-ஆம் ஆண்டு ஜூன் 17 அன்று மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார். ஆங்கிலேயரிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக, ரயில் நிலைய கழிப்பறையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு அவரும் இறந்தார்.

வாழ்க்கைச் சுருக்கம்
வாஞ்சிநாதன் 1886 ஆம் ஆண்டு திருவிதாங்கூரின் செங்கோட்டையில் (தற்போது தென்காசி மாவட்டம் தமிழ்நாடு) ஒரு ஏழை இந்துக் குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ரகுபதி அய்யரும் ருக்மணியும் இவருக்கு சங்கரன் என்று பெயரிட்டனர். செங்கோட்டையில் பள்ளிப்படிப்பை பயின்ற இவர், பின்னர் திருவனந்தபுரத்திலுள்ள கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் கோவில் கணக்காளராக வாழ்க்கையை தொடங்கிய வாஞ்சிநாதன், பின்னர் திருவிதாங்கூர் வனத்துறையில் அரசு வேலையில் சேர்ந்தார். சீதாராமய்யரின் மூத்த புதல்வியான பொன்னம்மாளை மணந்தார். இத்தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, சிறிது காலத்தில் இறந்தது.
போராட்டத்தில் ஈடுபாடு
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் வாஞ்சிநாதன் பங்கேற்றார். ஆங்கிலேயர்களைத் தோற்கடிக்க வன்முறை வழிகளை நாடிய மற்றொரு ஆர்வலரான வேங்கடேச சுப்ரமணிய அய்யரிடம் ஆயுதப் பயிற்சி பெற்றார்.நீலகண்ட பிரம்மச்சாரி பாரதியாருடன் "இந்தியா" செய்தித்தாளில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1908 தின்னவேலி கலவரத்திற்குப் பிறகு, பிரம்மச்சாரி தனது "பாரத மாதா சங்கம்" என்ற அமைப்பில் இளைஞர்களை சேர்த்துக்கொண்டு, பிரித்தானிய ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு முறைகளில் பணியாற்றினார். பிரம்மச்சாரி தலைமையிலான குழுவில் இடம்பெற்றிருந்த வாஞ்சிநாதனின் மைத்துனர் சங்கர கிருசுணய்யர் வாஞ்சிநாதனை இவரிடம் அறிமுகப்படுத்தினார்.
ஆஷ் படுகொலை
ராபர்ட் ஆஷ் அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்தார். வ. உ. சிதம்பரனாரால் நிறுவப்பட்ட "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனம் பெரும்பாலான இந்திய வணிகர்களால் ஆதரிக்கப்பட்டது மற்றும் இந்தியத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்தது. இதனை ஒடுக்க ஆஷ் பல நடவடிக்கைகளை எடுத்தார் என்றும், இவர் சிதம்பரனார் மற்றும் சக செயற்பாட்டாளர் சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டி சிறையிலடைத்தார் என்றம்,.1908 ஆம் ஆண்டு தின்னவேலி எழுச்சியின் போது, வன்முறை மூலம் கலவரத்தை அடக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார் என்றும். குற்றாலத்தில் இந்தியர்கள் குளிக்கத் தடை செய்தார் என்றும் காரணம் சொல்லி, அவரது செயல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, புரட்சிகர பிரிவு அவரை படுகொலை செய்ய முடிவு செய்தது என்றும், . இதற்கு 25 வயதான வாஞ்சிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவும் கூறுகின்றனர்.
ஆனால் வ உ சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதியும், அப்போதைய 1908ஆம் ஆண்டுவாக்கில் திருநெல்வேலி ஆட்சியராக இருந்த ஆங்கிலேயர் வின்ச்சும் தான். ஆனால், 1911ஆம் ஆண்டு அந்த நீதிபதி பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து சென்றுவிட்டார். ஆட்சியர் வின்ச் ஓராண்டு விடுப்பில் சென்றுவிட்டார். இந்த சமயத்தில் மீண்டும் திருநெல்வேலி ஆட்சியராக நியமிக்கப்பட்டவர்தான் ஆஷ்.
ஆஷ் துரை தான் தனது அதிகார எல்லையில் நிலவிய சாதிய தீண்டாமையை கண்டு வெறுத்தவர் தாழ்த்தப்பட்ட மக்கள் முற்பட்ட சாதி இந்துக்களால் மிகவும் கீழ்தரமாக நடத்தப்படுவதை கடுமையாக எதிர்த்தவர், நெல்லை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர்களை சரி சமமாக மதித்தவர், தனது அலுவலகத்தில் தீண்டாமையை ஒழித்து அனைவரையும் ஒரே இடத்தில் உணவு உண்ண வைத்தார், அனைவரும் ஒரே பானையிலிருந்து நீர் அருந்த உத்தரவிட்டார், இதனால் அங்கு வேலை செய்த உயர்சாதி இந்துக்களின் வெறுப்பை விரைவில் சம்பாதித்தார்.
குற்றால அருவியில் சாதிய வேற்றுமையின்றி அனைவரும் குளிக்கலாம் என்று தாழ்த்தபட்ட மக்களுக்கு அருவியில் குளிக்க இருந்த தடையை நீக்கி உத்தரவிட்டார். அதன் அருகில் இருந்த கோயிலை கடந்து தான் அருவிக்கு செல்ல முடியும் அந்த தீட்டு என்று சொன்ன தடையையும் நீக்கினார். சனாதன வாதிகளால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஒரு நாள் ஆஷ் ம் அவரது மனைவியும் குதிரை சேரட் வண்டியில் சென்று கொண்டிருந்தனர் அப்போது தலித் குடிசையில் ஒரு பெண் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தாள், பிரசவத்தில் சிக்கல் என்பதால் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தனது சேரட் வண்டியை தந்து உதவினார், ஆனால் அந்த வண்டி அக்கிரகாரம் வழியாக செல்ல வேண்டி இருந்தது அப்போது அக்கிரகார இளைஞர்கள் தலித்தை ஏற்றிக்கொண்டு வண்டி வரக்கூடாது என்று தடுத்து நிறுத்தினர், அதில் இந்து அமைப்பை சேர்ந்த சங்கரனும் ஒருவன், ஆனால் துரை வண்டிக்காரனுக்கு வண்டியை செலுத்த உத்தரவிட்டார் இடை மறித்த இளைஞர்களுக்கு வண்டிகாரனின் குதிரை சாட்டையால் அடி கிடைத்தது. அந்த பெண்ணும் மருத்துவமனையில் காப்பாற்றபடுகிறார், இப்படி சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக அவரது செயல் இருந்தது.
அன்றை நாளில் வெளிவந்த பார்ப்பனர்கள் பத்திரிக்கையான தி இந்து நாளிதழிலும் அயோத்தி தாச பண்டிதரால் நடத்தப்பட்ட ஒரு பைசா தமிழன் இதழிலும் ஆஷ் துரையை சிறந்த நிர்வாகி என்றும் இரக்க குணமும் மனிதாபிமானமும் உள்ளவர் என்றும் பதிவு செய்திருக்கிறது.
சனாதன தர்மத்தை மீறிய ஆஷ்
ஆஷ் துரையால் நேரடியாக பாதிக்கப்பட்டதாலும் அனைவரையும் சமமாக நடத்தி சனாதன தர்மத்தை மீறி இருப்பதாலும் வெகுண்டெழுந்தார் இந்துத்துவ சனாதன வாதியான வாஞ்சிநாதன்.
ஏற்கெனவே ஆஷ் மீது வெறுப்பில் இருந்த பார்ப்பனர்கள், இவரை பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைத்து ஆஷ் ஷுக்கு எதிராக திட்டம் தீட்டினர், இதில் முக்கியமானவர் வவேசு அய்யர் இவர் வாஞ்சி நாதனுக்கு பெல்ஜியத்திலிருந்து வரவழைக்கபட்ட துப்பாக்கி கொண்டு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுக்கிறார்.
15/05/1911 செங்கோட்டை வந்து தங்கி ஆஷ் ஷின் வரவிற்காக காத்திருந்தான்,
17/06/1911 கொடைகானலில் படிக்கும் தனது பிள்ளைகளை பார்க்க அவரும் அவரது மனைவியும் நெல்லையிலிருந்து மணியாச்சி ரயிலில் புறப்பட்டு காலை 10 மணிக்கு மணியாச்சி வந்து சேர்கிறார்கள், அதே ரயிலில் ஏறி பயணப்பட்டு வந்தனர் வாஞ்சியும் சங்கர கிருஷ்ணனும்.
மணியாச்சியிலிருந்து போட்மெயில் ரயிலை பிடித்து கொடைக்கானல் செல்ல காத்திருந்தனர் அப்போது தான் ஆஷை அவர்களது பெட்டியில் ஏறி சுட்டான் வாஞ்சி நாதன், ஆஷின் உதவியாளர்கள் வாஞ்சியை பிடிக்க முயன்றனர் அவன் துப்பாக்கி காட்டி மிரட்டிவிட்டு ஓடி ஒரு கழிவறையில் சென்று ஒளிந்து கொள்கிறான் கூட வந்த சங்கர கிருஷ்ணன் அருகில் இருந்த வயலுக்குள் புகுந்து தப்பிவிடுகிறான். இனி தப்ப வழியில்லை என்றறிந்த வாஞ்சி துப்பாக்கியை தனது வாயில் சுட்டு உயிரை மாய்த்துக்கொள்கிறான்.
இவருடன் வந்த சகா கூட்டாளி சம்பவத்தைத் தொடர்ந்து தப்பிச் சென்றார்.வாஞ்சிநாதனின் தந்தை அவரது செயல் பார்ப்பனர்களுக்கு எதிரானது எனக் கருதி உடலை வாங்க மறுத்துவிட்டார். இவரின் உடல் பின்னர் பாளையங்கோட்டை கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவரது சட்டைப் பையில் ஒரு கடிதம் காணப்பட்டது, அதில் அவர் ஆங்கிலேயர்கள் சனாதன தர்மத்தை அழிக்க முற்பட்டதாகவும், ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டியடிக்க தனது பங்கைச் செய்ததாகவும் கூறினார்.
வாஞ்சியின் சட்டைப்பையில் கொலைக்கான காரணம் எழுதப்பட்டிருந்த கடித்த்தில் இருந்தது பின்வருமாறு,
“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜூனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை.
இப்படிக்கு
R. வாஞ்சி அய்யர்”
இப்படி இந்து சனாதன தர்மத்தை மீறியதால் தான் ஆஷ் துரையை சுட்டுக்கொன்றதாக எழுதியிருக்கிறான் வாஞ்சி நாதன் இதில் எங்கிருந்து சுதந்திர போராட்டம் வந்தது? உண்மையில் சுதந்திர போராட்டம் தான் காரணம் என்றால் ஏன் மற்ற கலெக்டர்கள் கொல்லப்படவில்லை? அவர்கள் எல்லாம் இவர் பார்வையில் நல்லவர்களா? இந்தியாவை ஆட்சி செய்ததாக யாரையெல்லாம் குறிப்பிடுகிறார் பார்த்தீர்களா ராமன் அர்ஜூனன் குருகோவிந்த் கிருஷ்ணர் … மாட்டுக்கறி சாப்பிடுகிறவரை மிலேச்சன் என்று இழிவாக சித்தரிக்கிறார் இதுவும் இன்று வரை நிலவும் இந்துத்துவா மன நிலை தான், மாட்டுக்கறி சாப்பிட்டால் கட்டிவைத்து அடிப்பது கொலை செய்வது என இப்போதும் தொடர்கிறது. பஞ்சமனுக்கு பதவி தருகிறார்களாம் எவ்வளவு பெரிய குற்றம் என்கிறார்?
இந்தியாவை இந்துஸ்தான் என்றும் இன்று ஆர் எஸ் எஸ் சொல்லும் அதே கோட்பாட்டை எழுதியிருக்கிறார். இவர் பார்ப்பனர் என்ற ஒரே காரணத்தினால் சுதந்திர போராட்ட தியாகியாக கட்டமைக்கபட்டிருக்கிறார், வீர வாஞ்சி நாதன் என்றும் கட்டமைக்கப்படுகிறார். மணியாச்சி ஜங்சனுக்கு வாஞ்சி மணியாச்சி என்றும் பெயரிட்டுள்ளனர்.
இந்த கொலைக்கு காரணமாக குற்றம் சாட்டப்பட்ட 14 பேருடன் பாரதியாரின் பெயரும் இடம் பெற்றிருந்தது, வவேசு ஐயருடன் இருந்த தொடர்பின் காரணமாக பாரதியார் மீதும் குற்றச்சாட்டு இருந்தது, இருப்பினும் பாரதியார் ஆங்கிலேயர்களுக்கு தனக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி 4 மன்னிப்பு கடிதங்களை எழுதினார்.
"I beg to remain Your Excellency's most obedient servant " C Subramaia Bharathi (G.O No.1331 dt 18.12.1918 Public)(32)
இதை தவிர போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து பாரத மாதா சங்கத்தை சேர்ந்த தர்மராஜா விசம் உண்டு தன்னை மாய்த்துக்கொண்டார், புணலூர் வெங்கடேசுவர அய்யர் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு மாண்டார்.
ஆங்கிலேயன் (அய்ரிஷ்) என்பதால் ஆஷ் துரையை வில்லனாக சித்தரித்து, வாஞ்சிநாதன் பார்ப்பனர் என்பதால் அவனை கதா நாயகனாக சுதந்திர போராட்ட தியாகியாக சித்தரிக்கிறார்கள் பார்ப்பனர்கள்.
- கடைசியாக திருத்தப்பட்ட நாள்;- 24.06.2026